புறம் தள்ளி நீ போக......

 புறம் தள்ளி நீ போக

புது உலகம் தந்தாயே

புதிரான வாழ்வில்

கேள்வி குறியாய் ஆனேன்

மௌனத்தின் உச்சியில் நின்றேன்

தனிமையின் சுவரில் ஒட்டிய இருள் ஆனேன்

கிறுக்கி கசக்கி எரிந்த

பிழையான கவிதையானேன்

பூக்கள் இல்லாத செடியில்

காய்ந்து விழுந்த இலையானேன்

உரமாகும் முன் எரிந்த சாம்பலாக கரைந்தேன்

கனவில் வாழ கண்களை இழந்தேன் 

நினைவில் பார்த்திட நிஜத்தை மறந்தேன்

பேச்சுக்கள் கேட்காத மேடையில்

பேச்சாளரானேன்

அழுகை எனும் கடலில்

நீந்த முடியாமல் மூழ்கிப் போனேன்

இனி நான் என்ன செய்வது

இந்த முறிந்த காதலில்
முடிவில்லாமல் வாழ தொடங்கினேன்

நான் வாழ்கிறேன்  காதலே ஒரு கவிஞனாக

No comments:

Post a Comment