"தனிமை"

வேண்டாம் வேண்டாம் 

என்கிறேன் இருந்தும் 

விரும்பி விரும்பி 

என்னை 

காதலிக்கிறது 

"தனிமை"

எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

 எந்தன் வரிகளின் வர்ணனையே!❣

.
உனக்கான இறுதி துதியை எழுதுகிறேன்...☹
.
முடிந்தால் முதலும் முடிவுமாய் இதை உன் விழிகளில் எடுத்துக் கொள்!😶
.
காலங்கள் கடக்கையிலும் உன்னை எந்தன் கண்ணகியாக என் கண்ணுக்குள் மூடி வைத்தேனே!😒
.
கண்ணகி என்றதற்காக என்னில் தீ மூட்டி என்னையே எரித்தாயே!😕
.
கானல் நீர் கொண்டு என் காதலை அணைத்தாயே!💙
.
அணைக்க நினைத்து கண்ணீரை அளித்துச் சென்றாயே!😭
.
போதும்...
இத்தனை காலமும் சொல்லாத காதலை சொல்லோடு சொல்லிய இந்த ஒருதலைக்காதல் போதும்...🖤
.
மௌனம் அதை கலைத்து எந்தன் காதலை கூறிடும் கனா நான் இன்னும் காணவில்லை...💔
.
கண்டதும் உன் கண் பார்த்து கவி பாடுகிறேன் அந்த நாளிற்காக காத்திருக்கிறேன்...😀
.
கார்மேகக்கூந்தல்!💨
கண்டவரை ஈர்த்திடும் கண்கள்!👁 அதனை மெருகூட்டும் கண்ணாடி!👓
இதில் தடுமாறி விழுந்தவனை நிலைகுலைய செய்யப்பட்ட கன்னக்குழி!😊
.
வரிசையில் வருகின்றன வர்ணனைகள்!🥰
.
இருந்தும் வலிகள் தந்த இந்த வாழ்வின் வர்ணனைகள் இனி வேண்டாம்...😓
.
எதற்கு இந்த நடைபிணவாழ்க்கை?😟
.
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்...😞
இனி நிகழ்பவை நான் நினைத்தவையாக அமையட்டும்...😔
என் எதிர்காலம் தனியாக செல்லட்டும்...😟
.
என்றும் எந்தன் வெண்ணிலவு நீ மட்டும் தான்!🌝
இருந்தும் எந்தன் இரவுகள் அமாவாசை ஆகட்டும்...🌚 .

நினைத்தது ஏதும் கிடைக்காமல்

 நினைத்தது ஏதும் 

கிடைக்காமல் 

நகரும்  நிகழ்காலத்தில் 

நடைபிணமாய் வாழ்கிறேன் 

வாழ்க்கையின் விரக்தியின் 

உச்சத்தில்...

எந்தன் மரணத்தின் தேதியை..!!!

எந்தன் மரணத்தின் தேதியை..!!!

மங்கை உன் கைகளில் 

தந்துவிட்டேன்...

மனம் மாறி என்னை 

ஏற்றுக்கொள் இல்லையேல்...

உன் கரம் கொண்டே மாய்த்துவிடு... 

நிதமும் உன் நினைவுகளில் 

நிலைமாறிச்செல்வதற்கு 

மரணம் நிரந்தரமானது...

எவ்வளவுதான் சண்டைகள் மிகவும் நீளமானது என்றாலும்,

 எவ்வளவுதான் சண்டைகள் 

மிகவும் நீளமானது

என்றாலும், 

அதனை சமாதானம் 

செய்வதற்கு,

சிறு புன்னகை மட்டும் 

காதலில் போதுமானதாகும் 

கனவுகளின் காகித ஓடம் நான்...

கனவுகளின் காகித ஓடம் நான்...

உன் நினைவுகள் அடித்துச் 

செல்லும் திசையெல்லாம் 

தடுமாறிச் செல்கிறேன் 

உன்னோடு இணைந்திடும் 

பேராசையில்...

ஆறடி பெட்டியில் அமைதியாய் நான் ஊர்வலம் செல்கையில்...!!


 

ஆறடி பெட்டியில் 

அமைதியாய் நான் ஊர்வலம் 

செல்கையில்...!!

உன் விரல்கள் தீண்டிய மலர்கள் 

என் உடலை தீண்டிடவே...!!

நானும் உயிர் வாழ்கிறேன்

உன் நினைவுகளோடு 

கல்லறையில்...!!

ஆறடி பெட்டியில் அமைதியாய் நான் ஊர்வலம்

 ஆறடி பெட்டியில் 

அமைதியாய் நான் ஊர்வலம் 

செல்கையில்...!!

உன் விரல்கள் தீண்டிய மலர்கள் 

என் உடலை தீண்டிடவே...!!

நானும் உயிர் வாழ்கிறேன்

உன் நினைவுகளோடு 

கல்லறையில்...!!

விடுதலை கிடைத்தது எனக்கு

இறுதியாக 

உன் நினைவுகளில் இருந்து 

விடுதலை கிடைத்தது எனக்கு 


மரணம் என்னை சிறை 

பிடித்து சென்றதால் 

தனிமையின் ஆயுள்கைதி நான்!!!


தனிமையின் ஆயுள்கைதி நான்!!!

என்றாவது 

என்னை விடுதலை செய்ய 

அவள் வருவாள் என்று 

எதிர்பார்ப்போடு 

இதயசிறையினுள் 

காத்திருக்கிறேன் 

இத்தனை காலமும்...!!!