கால்கள் அலையுதே

 
உன்னைக் காண கால்கள்
அலையுதே,
உன் தெருவிளக்கு நண்பனாய்
தோன்றுதே,
நீ காதல் சொல்லாமல் காலங்கள்
ஓடுதே...

தனிமை

கூட்டத்தில் தனிமை
விரும்புதே,
தனிமையில் நம் காதல்
முலைக்குதே,
உன் நடையில் கூந்தல்
இசைக்குதே
கருவிழி என்னை நோக்கிச்
சிரிக்குதே…
 

ஒருதலை காதலர்கள்


தினமும் ஒரு கடிதம்

எழுதுவார்கள் நினைவுகளினால்,
ஆனால்
அவர்களின் முகவரி தாண்டாது...
ஒருதலை காதலர்கள்... ❤

பெண் என்பவள் பூமாதேவி


ஆண் வாரிசு பெறுவதில் தோல்வியுற்று...

நலிந்து கிடக்கிறாள் அடுத்தடுத்து
"பெண் குழந்தைகளை ஈன்றவள்"
ஆண்மை குறைந்தவனை மணந்து...
அரச மரத்தில் தொட்டில் கட்டுகிறாள்...
"மலடி"
மங்கல காரியங்களில் மேடையில் நிற்கத் தயங்குகிறாள்...
"விதவை"
வயிற்றுப் பசிக்கு ஆண்களின் காமப்பசி தீர்த்து...
உணவைப் பெறுகிறாள்
"விபச்சாரி"
கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு
கணவனை அனுமதிக்காமல்...
தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்...
"வம்ச தர்மம் காப்பவள்"
சீர் கேட்கும் புகுந்த வீட்டிற்கும்...
கொடுக்க மறுக்கும் தாய் வீட்டிற்கும்...
நடுவே திரிசங்கு நரகத்தில் விழுகிறாள்...
"வாழாவெட்டி"
குடிகாரக் கணவனிடம் அடிபட்டு மிதிபட்டாலும்...
தியாகத்தின் புனிதம் காக்கிறாள்...
"பத்தினி"
வீட்டின் அக்கினி மூலையில் நாள் தோறும் தீக்குளிக்கிறாள்...
கல்வியில் தங்கம் வென்றிருந்த
"இல்லத்தரசி"
கணவன் வஞ்சித்து கை விட்ட பிறகு...
வேறு துணையோடு சேர்ந்து வாழுகிறாள்...
"நடத்தைக் கெட்டவள்"
தடைகளைத் தாண்டி வேற்று சாதிக் காதலனை மணந்ததால்...
ஒதுக்கப்படுகிறாள்
"ஓடுகாலி"
எத்தனைப் புரட்சிகள் வெடித்தாலும்...
இத்தனைப் பெண்களையும் உயிரோடு விழுங்கும் பூமி கொக்கரிக்கிறது...
"பெண் என்பவள் பூமாதேவி"

உன்போல் பெண்ணை பார்த்தது இல்லை


கவிதை எழுதியே காலங்கள் போகையிலே,
கண்மணி உன்னை கண்டு காதல் நோய் தாக்கையிலே,
உன் மனசை பறிக்க வருகையிலே,
என்னை மார்பில் வளைத்தவலே,
எதிர் நீ வருகையிலே குறுகி போகிறேன்,
உன் கூந்தலின் பின்னே,
காதலை சொல்ல கவிதை எழுதையில,
காகிதம் கலங்குகிறது,
உன்போல் பெண்ணை பார்த்தது இல்லை என்று…!!

உரிமை கூட இல்லை என்கிறாள்


உறவுக்கு அழைத்தவள்,
இன்று உதறி போனவள்,
என் கவிதைக்கு சொந்தமானவள்,
இன்று கண்ணீர் கடலில் எறிந்தவள்,
வேண்டும் என்று சொன்னவள்,
இன்று வேதனையால் கொன்றவள்,
உலகம் எல்லாம் நீதான் என்றாள்,
இன்று உரிமை கூட இல்லை என்கிறாள்...!!!

கூந்தல்


காற்றில் மிதக்கும் உன் கூந்தலடி
அது கருவிழி உறசும் தூண்டலடி
மல்லிகையும் மல்லு கட்டுதடி
அதை அடக்க என் மனசு துடிக்குதடி
என் மூக்கை உறசுதடி
அது முத்தங்கள் கேட்குதடி…

அடியே அழகியே


அடியே அழகியே
உன் காலின் நடுவில்
பல போன் மணிகள் இசைக்குதே
நடையிலும் உன் இடை கவருதே
நறுமணம் மயக்குதே
உன் கூந்தல் என்னும் சிறை கம்பிலே

என் கண்ணீர் துடைக்காமல் சென்றது எதற்கு...?


இன்று நேரங்கள் இல்லையா
உனக்கு,
உன் நினைவில் தவிக்கும் காதல்
எனக்கு,
கன்னத்தில் விளையாடத் தெரிந்த
உனக்கு,
என் கண்ணீர் துடைக்காமல் சென்றது
எதற்கு...?

கண்ணீர்

 
ஏன் எதற்கு என்றெல்லாம்
தெரியவில்லை
சில நினைவுகளை மீண்டும்
நினைத்து பார்க்கும் பொது
தானாகவே விழியை எட்டி
பார்க்கின்றது “கண்ணீர்”