நீ எனக்கு இல்லை.....
என்று தெரிந்ததிலிருந்து....
நம்பத் தொடங்கிவிட்டேன்;
மறுஜென்மங்கள்
உண்டு என்பதை.!
தெரியாமல் பார்த்துவிட்டேன்.!
விபத்தில் சிக்கிவிட்டது
என் மனது.!
அத்தனை ஆபத்தா என்ன;?
உந்தன் இடையின் வளைவுகள்...
எந்தன் மரணத்திலாவது
உந்தன் மனம்
எனக்காக ஒற்றை நிமிடம்
ஏங்கிடுமா!
என் கரம் பற்றி கண்ணீர்
வடித்திடுமா!
உந்தன் மௌனத்தை
களைத்து விடு!
மரணத்தை கூட
மனதார என்று
கொள்வேன்
மங்கை என்றும்
உனக்காக!
என்ன பாவம் செய்ததோ
தெரியவில்லை!!
அவள் எனக்கில்லை என்பதை
உணராததால்
இன்னமும் துடித்து கொண்டே
இருக்கிறது
"என் இதயம்"
போதுமடி கண்மணி.!
உன்னை எண்ணி
கனவுலோகத்தில்
நான் காவியம்
எழுதியது..!!
இனி நீயும்
வேண்டாம்...!!!
உன் நினைவுகளும்
வேண்டாம்...!!!!