நீ எனக்கு இல்லை.....

நீ எனக்கு இல்லை.....

என்று தெரிந்ததிலிருந்து....

நம்பத் தொடங்கிவிட்டேன்;

மறுஜென்மங்கள் 

உண்டு என்பதை.!

அந்த காந்தப்புலத்தை கண்டுபிடித்தவரை


 அந்த காந்தப்புலத்தை
கண்டுபிடித்தவரை
யாரேனும் அறிந்தால் 
கூட்டி வாருங்கள்..
காந்தப்புலத்தையும் மிஞ்சி 
எப்படி இழுக்கிறது என்று கேப்போம் !
என்அவளுடைய  "இரட்டை விழிப்பார்வை"
                                     --- கவிதையின் மழை 

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

தெரியாமல் பார்த்துவிட்டேன்.!

விபத்தில் சிக்கிவிட்டது 

என் மனது.!

அத்தனை ஆபத்தா என்ன;?

உந்தன் இடையின் வளைவுகள்... 

எனக்கு நீ.! உனக்கு நான்.!

எனக்கு நீ.!
உனக்கு நான்.!

என்றும் இது கனவினில் 
மட்டும் தான் போல...

உனக்கு நான் என்பது 
கனவாக இருக்கலாம்..!!

என்றும் எனக்கு 
நீ மட்டும் தான்..!!

எந்தன் கல்லறையில் எழுதி வையுங்கள்!


எந்தன் கல்லறையில் 
எழுதி வையுங்கள்!
அவளை காதலித்ததற்கு அந்த காதகி 
தந்த முதல் பரிசு "கண்ணீர்"
இரண்டாம் பரிசு "மரணம்" என்று....!!!

இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;


 இறுதியில் அவளும் காதலில் விழுந்தால்;
அவள் காதலிக்கையிலும் நான் 
ஒருதலைக் காதலன் தான்;
அவள் காதலித்தது உண்மைதான்;
அவள் மனதை கொள்ளை 
கொண்ட கள்வன் மட்டும் 
நானில்லை...!!!

எந்தன் மரணத்திலாவது உந்தன் மனம் எனக்காக ஒற்றை நிமிடம் ஏங்கிடுமா!

எந்தன் மரணத்திலாவது 

உந்தன் மனம் 

எனக்காக ஒற்றை நிமிடம் 

ஏங்கிடுமா!

என் கரம் பற்றி கண்ணீர் 

வடித்திடுமா!

உந்தன் மௌனத்தை 

களைத்து விடு!

மரணத்தை கூட 

மனதார என்று 

கொள்வேன் 

மங்கை என்றும் 

உனக்காக!

என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை!!

 என்ன பாவம் செய்ததோ 

தெரியவில்லை!!

அவள் எனக்கில்லை என்பதை 

உணராததால் 

இன்னமும் துடித்து கொண்டே 

இருக்கிறது 

"என் இதயம்"

பிரம்மன் செதுக்கிய சிலையே..!!


பிரம்மன் செதுக்கிய 
சிலையே..!!
நீ என்னை மயக்கிய 
ரதியே..!!
உன்னால் இழந்தேன் 
என்னையே..!!
நீ என்றும் என் 
கவியே..!!

போதுமடி கண்மணி.!

போதுமடி கண்மணி.!

உன்னை எண்ணி 

கனவுலோகத்தில் 

நான் காவியம் 

எழுதியது..!!

இனி நீயும் 

வேண்டாம்...!!!

உன் நினைவுகளும் 

வேண்டாம்...!!!!