என் கண்ணீர் துடைக்காமல் சென்றது எதற்கு...?


இன்று நேரங்கள் இல்லையா
உனக்கு,
உன் நினைவில் தவிக்கும் காதல்
எனக்கு,
கன்னத்தில் விளையாடத் தெரிந்த
உனக்கு,
என் கண்ணீர் துடைக்காமல் சென்றது
எதற்கு...?

கண்ணீர்

 
ஏன் எதற்கு என்றெல்லாம்
தெரியவில்லை
சில நினைவுகளை மீண்டும்
நினைத்து பார்க்கும் பொது
தானாகவே விழியை எட்டி
பார்க்கின்றது “கண்ணீர்”

உன்னை இறுக்கி அணைக்கவா


பனித்துளிகள் அள்ளித் தரவா
உன் இதழில் முத்தமிடவா
காதோரம் சத்தம் போடவா
உன் கம்மலுடன் மல்லுக் கட்டவா
மேகத்தை மல்லிப் பூ ஆக்கவா
உன் கருநிற கூந்தலில் முக்கால் கோலம் போடவா
சூரியனைப் புதைத்து நிலவை மட்டும் வைக்கவா
விடியல் இல்ல அவ்விரவு அதில்
உன்னை இறுக்கி அணைக்கவா...

என் இதயம் கல் என்றால்

                                                என் இதயம் கல் என்றால்
                                                அது துடிக்கும் நொடியெல்லாம்
                                                செதுக்குகின்றது உன்
                                                உருவத்தை மட்டும்...



வரும் காலமாவது மீண்டும் என் வாழ்வில்

 

வரும் காலமாவது மீண்டும் என் வாழ்வில்
"நீ வருவாயா" என்ற கேள்வியின் விடையை
தேடி இரவெல்லாம் என் பயணம் உன்

நினைவோடு தனியே பயணிக்கிறது..!

தேடித்தேடி தேடல்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது தான் மிச்சம்

 

தேடித்தேடி தேடல்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது தான் மிச்சம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
என்னை விட்டு சென்ற அவளது நினைவுகளை

என் மனதில் இருந்து அளித்திடும் தடுப்பூசி..