விழி மீது குறை கொண்டால்....

 விழி மீது குறை கொண்டால் 

அந்த எழில் கூட எட்டி பார்க்கும் 

போல - உந்தன் கண்ணாடி 

விளிம்பில் காணாமல் 

போன எந்தன் இதயம் 

கூறுகிறது உன் அழகை பற்றி 

என் நாடோடி வாழ்க்கையை

 எதையும் எண்ணாமல் 

நகர்ந்து கொண்டிருக்கும் 

நாள்கட்டியும் ஓராண்டிற்கு 

தான் என்பதை 

அறிந்திடாத பேதையாய் 

வாழ்கிறேன் என் நாடோடி 

வாழ்க்கையை 

வந்த வழியினை அறியாத...

வந்த வழியினை அறியாத 

பேதையாய் உன் 

நினைவுப்பயணத்தில் 

தனியாக பயணிக்கிறேன் 

உனக்காக காத்திருந்த 

நாட்களை மீண்டும் 

மீட்டுவதற்காக...

வானவில்லாய்....

 வானவில்லாய் உன் முன் 

மாறி விட ஆசை 

தோன்றியதும் 

தொலைவதற்காக அல்ல 

அந்த நிமிடமாவது என் 

நினைவு உன்னை தொட 

வேண்டுமென்பதற்காக 

உன் கை கோர்த்து

 உன் கை கோர்த்து 

நெடுந்தூரம் சென்று 

தொலைய வேண்டும் 

நீயும், நானும் 

மட்டும் உள்ள 

அந்த அழகிய 

தீவில் 

பார்வை இழந்த

 பார்வை இழந்த 

ஓவியனின் கண்களில் 

தெரிந்த பட்டம்ப்பூச்சியாய் 

என்னுள் 

உன் நினைவுகள் 

சிறகடித்து பறக்கின்றன...

அன்பு காட்டியவர்களிடமே அன்பிற்காக

அன்பு காட்டியவர்களிடமே அன்பிற்காக 

ஏங்கும் நிலை எல்லோர் 

வாழ்விலும் வரும்..