ஒளிர்கின்ற ஒற்றைக்குமிழில்....

ஒளிர்கின்ற 

ஒற்றைக்குமிழில் 

உன்னை எண்ணி 

ஓராயிரம் கவி எழுதினேன்- 

ஏழுதிய போதே அணைந்த அந்த 

குமிழ் உணர்த்தியது என் கவிகள் எல்லாம் 

உன் கண்களுக்கு எட்ட போவதில்லை என்பதை...!!!

கண்ணீரின்...

கண்ணீரின் 

மழையில் 

நனைகிறேன் 

காதல் 

என்ற 

குடையை 

என்னவள் 

விரிக்க 

மறந்ததால் 

என் நாளங்களிலும்...

 என் 

நாளங்களிலும் 

நனைந்திருக்கிறது 

என்னவளின் 

நினைவுகள்...

உணர்வுகள் என்ற உருவகமும்

உணர்வுகள் என்ற 

உருவகமும் 

உடைகின்றது

எம் உடமைகள் 

எமக்கானதில்லை

என்று தெரியும் போது 

என் காதல் என்ற கதவிற்கு கள்ளச்சாவியாய் வந்தவளே


 என் காதல் என்ற கதவிற்கு 

கள்ளச்சாவியாய் வந்தவளே...

அந்த கள்ளச்சாவியால் 

என் வாழக்கைச்சாவியை

தொலைத்தேனே...