நான் விழும்போது கைத் தூக்கினாய்...

 நான் விழும்போது

கைத் தூக்கினாய்...

நான் உயரும் போது

நாம் நான் ஆக்கினாய்...

விட்டுச் செல்ல பெண்ணால் மட்டும் முடியுமோ?

திரும்பாமலே...

விரும்பாமலே....

..

காதலை அழிக்க

பெண்ணுக்கு மட்டும்

சிறப்பு விசை ....

ஈ பிடிக்கும் பசை..!

ஆண் மகனுக்கோ

இறப்பு திசை.....

ஒன்றின் பின் ஒன்றாக

அடிக்குப் பின் அடியாக

துடித்து துடித்து

மடிய

ஆண் செய்த பாவமென்னவொ?

இணைந்த பாவத்தில் உயிரோடு திண்ணவோ?

என்னை விரும்பியவள் தான் என் மீது காரணமே இல்லாமல் வெறுப்பு கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் ...!!

 என்னை விரும்பியவள் தான்

என் மீது காரணமே இல்லாமல்

வெறுப்பு கொண்டு

என்னை விட்டு பிரிந்து

சென்றுவிட்டாள் ...!!

ஆனால்....

அவளின் உள்ளமும்

அவளது நினைவுகளும்

என்னிடம் தான் இருக்கு

இதனை யாரிடமும்

என்னால் சொல்ல முடியாது ...!!

என் நிலைமையோ

திருவிழாவில்

கைபிடித்து வந்தவர்களை

பிரிந்து திரு திருவென

முழித்துக்கொண்டு

நிற்கும் சிறுவனை போல்

நான் நிற்கிறேன் ..!!

நமக்குள் காதல் பிறந்தது இடைவெளி மறைந்தது

நமக்குள் காதல் பிறந்தது

இடைவெளி மறைந்தது

வானும் நிலவும் போல்

நம் காதல் வளர்ந்தது ..!!

இடையில்

நமக்குள் பிணக்கு

காதல் கசந்தது

மீண்டும் நமக்குள்

இடைவெளி பிறந்தது

காதல் மறைந்தது ..!!

இதுதான்

காலத்தின் கோலமென்று

காயங்களுடன் மனம்

மௌனமாக பேசியது ...!!

காற்று..

இங்கு குளிர் காற்றையும் ,
வெப்பகாற்றையும்,
மிஞ்சி நிக்கிறது
தனிமையெனும் 
புயல் காற்று ..............!